Marriage Astrology

Easy way to find matching horoscope for marriage

Get Matching Star List | Find Horoscope Match | Find Marriage Time

Call us @ 99947 95356

நக்ஷத்திர பொருத்தம் : 10 பொருத்தம் :

நீங்கள் உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ வரன் தேடும்போது, முதலில் செய்ய வேண்டியது உங்கள் பிள்ளையின் நக்ஷத்திரத்திற்கு பொருந்தக்கூடிய நக்ஷத்திர பட்டியலை இங்கே ஜோதிடரிடமிருந்து பெற்றுக்கொள்ளவும். இது உங்களுக்கு பல வழிகளில் மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த பட்டியலை நீங்கள் பெற்றுக்கொண்டால், நீங்களாகவே உங்களுக்கு பொருத்தமான ஜாதகத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். நக்ஷத்திர பொருத்தம் இல்லையெனில், அப்பொழுதே நீங்கள் அந்த வரனை தவிர்த்துவிடலாம். இதனால் இரு தரப்பினருக்குமே பொருத்தத்தை பார்ப்பதற்கான நேரம் மற்றும் பணச்செலவு மிச்சமாகும்.

***பொருந்தும் நக்ஷத்திர பட்டியலை பெற ரூபாய் 100

ஜாதக பொருத்தம்

நக்ஷத்திர பொருத்தம் என்பது திருமண பொருத்தம் பார்க்கையில் பரிசோதிக்கப்படும் ஒரு முதல் நிலை அடிப்படை பொருத்தமாகும். ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. நக்ஷத்திர பொருத்தத்தை உறுதி பொருத்தம் செய்தபின் ஜாதக பொருத்தமும் பார்த்துக்கொண்டால் தான் நீங்கள் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியும்.
உங்களுக்கு ஏதேனும் ஒரு வரன் அறிமுகம் ஆகும்போது முதல் கேள்வியாக நீங்கள் அவரிடம் அவரது பிள்ளையின் நக்ஷத்திரத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அவர் கூறும் நக்ஷத்திரம் உங்கள் பட்டியலில் இருந்தால் நீங்கள் மேற்கொண்டு அவரின் ஜாதகத்தை அல்லது பிறந்த நேரம் தேதி மற்றும் ஊர் பெயரை தெரிந்து கொள்ள வேண்டும் . பின்பு உங்கள் ஜோதிடரை தொடர்பு கொண்டு உங்கள் பிள்ளைக்கும் அவர் பிள்ளைக்குமான ஜாதக ரீதியிலான பொருத்தத்தை காண வேண்டும். அப்பொழுது நீங்கள் ஜோதிடரிடம் கேட்கவேண்டிய ஆறு முக்கிய கேள்விகள்,

  1. இருவருக்குமான ஆயுள் தீர்க்கமாக உள்ளதா ?
  2. இருவருக்கும் திருமண வாழ்க்கைக்கான கொடுப்பினை நன்றாக உள்ளதா ?
  3. இருவருக்குமான குழந்தை பாக்கியம் எவ்வாறு உள்ளது ?
  4. இருவருக்கும் திருமண நேரம் என்று சொல்லப்படும் வியாழ நோக்கு உள்ளதா ?
  5. தசை சந்திப்பு எவ்வாறு உள்ளது ?
  6. இருவருக்குமான செவ்வாய் தோஷம் , ராகு கேது தோஷங்கள் சமன் செய்யபடுகிறதா ?
இவை அனைத்தும் திருப்தியாக அமைந்தபின், நீங்கள் திருமணத்தை முன்னெடுத்து செல்வதற்கான மற்ற விஷயங்களை எதிர் தரப்பினரிடம் பேச ஆரம்பிக்கலாம். எனவே, நீங்களாகவே உங்கள் பிள்ளைக்கான நக்ஷத்திர பொருத்தத்தை உறுதி செய்தபின், உங்களுக்கு ஏதாயினும் அதில் குழப்பம் இருந்தால் ஜோதிடரை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். அவரிடம் மேற்சொன்ன ஆறு கேள்விகளுக்கும் விடை பெற்று கொள்ளுங்கள்

ஜாதக ரீதியிலான பொருத்தத்தை காண ரூபாய் 300.

முகூர்த்த நேரம் குறிக்க

  1. நிச்சயம் செய்ய சுப முகூர்த்தம் - ஆண் , பெண் இருவரின் பெயர் மற்றும் நக்ஷத்திரத்தின் அடிப்படையில். படுவச்சி, நக்ஷத்திர அனுகூலம் பார்த்து நேரம் குறித்து தரப்படும்.
  2. திருமணம் செய்ய சுப முகூர்த்தம் - ஆண் , பெண் இருவரின் பெயர் மற்றும் நக்ஷத்திரத்தின் அடிப்படையில் படுவச்சி, நக்ஷத்திர அனுகூலம் பார்த்து நேரம் குறித்து தரப்படும்.
  3. புதுமனை புகுவிழா , கிரகப்பிரவேசம் செய்ய சுப முகூர்த்தம் - குடும்பத்தலைவர் மற்றும் தலைவியின் பெயர், நக்ஷத்திரத்தின் அடிப்படையில் படுவச்சி மற்றும் நக்ஷத்திர அனுகூலம் பார்த்து நேரம் குறித்து தரப்படும்

முகூர்த்த நேரம் குறிக்க : ரூபாய் 300

Thirumana Porutham - Tamil

ஆண் மற்றும் பெண்ணின் ராசி ,நட்சத்திரத்தை தேர்வு செய்தபின் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்

View details »

Star Match - English

To get Marriage match in south Indian style , please enter the correct Nakshatra and Rasi of the male and female in their respective boxes and click submit .

View details »

Kundli Match - Hindi

To get kundli match report in Hindi language , please enter the correct Birhth Star and Zodiac sign of the male and female in their respective boxes and click submit .

View details »


Call our Astrologer

மணமக்களின் ஜாதக பொருத்தம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இணையதளத்தின் ஆஸ்தான, 25 வருட அனுபவமிக்க ஜோதிடரை தொடர்பு கொள்ள

View details »

Birth Chart

25 வருட அனுபவமிக்க ஜோதிடரால் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணித்து எழுதப்படும் ஜாதக புத்தகத்தை பெற

View details »